Sunday, 28 June 2020

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை குரலில் 'மாடு 'என திருவள்ளுவர் உரைப்பது எதை?

1. 'ஊக்கமது கைவிடேல் 'என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க.
A.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
B. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்🤩
C. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
D. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
2. "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனில்"
மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது?
A.நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேச மாட்டார்கள்
B. தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர் பூக்கள் வளரும் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்
C. அடுத்தவர் பொருளை களவாடலாம் என உள்ளதால் நினைப்பது கூட தீமையானது🤩
D. மோந்து பார்த்தால் அனிச்சமலர் வாடிவிடும் இந்த முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்
3. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கு இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும் என உரைக்கும் திருக்குறள் எது?
A.அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்🤩
B.மனத்துக்கண் மாசிலன் ஆதல்
C.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
D.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
4. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை-------------- வார். இக்குறட்பா எந்த அதிகாரத்தில் பயின்று வந்துள்ளது?
A.அரண் வலியுறுத்தல்
B.இன்னா செய்யாமை
C. கொல்லாமை
D.பெரியாரைப் நிலையாமை🤩
5. பிற உயிர்களின்--------- கண்டு வருந்துவது அறிவின் பயன் ஆகும் என்று வள்ளுவர் கூறுவது?
A.மகிழ்வை
B.பகையை
C. துன்பத்தை🤩
D. செல்வத்தை
6 இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ் சொற்களை பொருத்துக
a)வேளாண்மை 1.அகநானூறு
b) உழவர் 2.குறுந்தொகை
c) மருந்து 3.திருக்குறள்
d) மீன் 4.நற்றிணை
e) மகிழ்ச்சி 5.தொல்காப்பியம்
A.43152
B.34125😍
C.31425
D.43512
7. அகவிருளை போக்கும் விளக்காகத் திருவள்ளுவர் உரைப்பது எது?
A.புறம் பேசாமை
B.பொய் பேசாமை😍
C.கலவாமை
D.கள்ளாமை
8.வள்ளுவர் மணற்கேணியோடு அறிவை எவ்வாறு ஒப்பிடுகிறார்?
A.உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு
B.இம்மை மறுமை பற்றி அறிவதை
C.வரவு, செலவு இரண்டையும் அதிகரிப்பதை
D.மனிதர்கள் நூல்களை கற்றுக்கொள்வதை😍
9. எந்த ஊரும் தன் ஊராகும் இதனை அறிந்தும் சிலர் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்? என்ற கருத்தை உணர்த்தும் திருக்குறள் எது?
A.யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு😍
B.தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
C.உவப்பத் தலைக்கூடி உள்ளிப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
D.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை குரலில் 'மாடு 'என திருவள்ளுவர் உரைப்பது எதை?
A.மக்கள்
B.பாதுகாப்பு
C.செல்வம்😍
D.விலங்கு

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: