எந்த தாதுவிலிருந்து உலக உற்பத்தியில் 76 சதவீதம் தாமிரம் பெறப்படுகிறது?

1.5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகிமீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
A.2மீவி⁻¹
B.0.5மீவி⁻¹🌀
C.12.5மீவி⁻¹
D.7.5மீவி⁻¹
2. பொருந்தாததை தேர்ந்தெடுக்க.
A.கேஸ்கிரைன் தொலைநோக்கி🌀
B.கலிலியோ தொலைநோக்கி
C.கெப்ளர் தொலைநோக்கி
D.நிறமற்ற ஒளி விலக்கிகள்
3.A,B,C மற்றும் D என்ற நான்கு பொருட்களின் ஒளிவிலகல் எண்கள் முறையை 1.31,1.43,1.33,2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
A. A🌀
B. B
B. C
D. D
4. கீழ்க்கண்டவற்றுள் அதிகளவில் வெப்பப்படுத்துவதால் பரும வெப்ப விரிவிற்கு உட்படுவது எது?
A.நீர்🌀
B.பாதரசம்
C அலுமினியம்
D.கண்ணாடி
5. 144 கூலும் மின்னூட்டம் ஒரு நிமிட நேரம் ஒரு மின்விளக்கின் வழியே பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
A.2.4 A🌀
B.4.16 A
C.13mA
D.8.64 A
6. பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்.
கூற்று: நிக்ரோம் வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது.
காரணம்: நிக்ரோம் என்பது மிகக் குறைந்த மின்தடை கொண்ட ஒரு கடத்தி ஆகும்
குறியீடுகள்:
A. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் கூற்றுக்கான சரியான காரணமாகும்
B. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான சரியான காரணம் அல்ல
C. கூற்று சரி காரணம் தவறு🌀
D. கூட்டு தவறு காரணம் சரி
7. கீழ்க்கண்டவற்றுள் மனிதனின் கதிரியக்க பாதிப்பின் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவு எவ்வளவு?
I.ஒரு வாரத்திற்கு 250 மில்லி சிவர்ட்
II.ஒரு வருடத்திற்கு 20 மில்லி சிவர்ட்
III.ஒரு மாதத்திற்கு 250 ராண்ட்ஜன்
IV.ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன்
குறியீடுகள்:
A.I மற்றும்II
B.II மற்றும்IV🌀
C.Iமட்டும்
D.I மற்றும்III
8. கீழ்கண்ட எந்த தொகுதி தாதுக்களை உருவாக்கும் குடும்பம் என்றழைக்கப்படுகிறது?
A.தொகுதி 13
B.தொகுதி 14
C.தொகுதி 15
D.தொகுதி 16🌀
9. கீழ்கண்ட எந்த தாதுவிலிருந்து உலக உற்பத்தியில் 76 சதவீதம் தாமிரம் பெறப்படுகிறது?
A.காப்பர் பைரைட்🌀
B.ரூபி காப்பர்
C.காப்பர் கிளான்ஸ்
D.மாலகைட்
10. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
கலவைகள் - எடுத்துக்காட்டு
A.திண்மத்தில் திண்மம் -துருபிடிக்காத எஃகு B.நீர்மத்தில் நீர்மம் -பாதரசத்துடன் கலந்த சோடியம்🌀
C.நீர்மத்தில் திண்மம் - நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்
D. வாயுவில் நீர்மம் - காற்றிலுள்ள நீராவி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.