தமிழ் சமுதாய வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் தொல்லியல் கண்டுபிடிப்புகள்

KALVI ULAGAM
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், விழுப்புரம்.
தேர்வுத்தாள் எண். 101 - தமிழக வரலாறு மற்றும் பண்பாடு
தமிழ் சமுதாய வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் தொல்லியல் கண்டுபிடிப்புகள்

KALVI ULAGAM
WHATSAPP: 97 90 47 26 07 GMAIL: kalviulagamvillupuram@gmail.com 

1. கீழ்க்கண்டவற்றுள் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கள்?
அ. செங்கற்கள்
ஆ. பாறைக் கற்கள்
இ. சுண்ணாம்புக் கற்கள்.
ஈ. குவார்சைட் கற்கள்.
See Answer:

2. பழைய கற்கால கருவிகள் சென்னைக்கு அருகில் கிடைக்கப்பெற்ற இடம்?
அ. பல்லாவரம்
ஆ. இராமாபுரம்
இ. இராயபுரம்
ஈ. வேளச்சேரி.
See Answer:

3. கீழ்க்கண்டவர்களில், தமிழகத்தில் பழைய கற்கால கருவிகளை கண்டுபிடித்தவர் யார்?
அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. மார்டிமர் வீலர்
இ. ராபர்ட் புரூஸ் புட்
ஈ. ஆர். டி. பானர்ஜி.
See Answer:

4. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரிகள் தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற இடம்?
அ. கிருஷ்ணா ஆறு
ஆ. காவிரி ஆறு
இ. வைகை ஆறு
ஈ. கொறட்டலை ஆறு (கொசத்தலை ஆறு).
See Answer:

5. தமிழகத்தில் பழைய கற்காலம் எதுவரை நீடித்தது?
அ. கி.மு.1,500
ஆ. கி.மு.3,000
இ. கி.மு.5,000
ஈ. கி.மு.10,000.
See Answer:

6. பழைய கற்கால மனிதர்கள் எந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர்?
அ. கிராம வாழ்க்கை முறை
ஆ. நகர வாழ்க்கை முறை
இ. மேம்பட்ட வாழ்க்கை முறை
ஈ. நாடோடி வாழ்க்கை முறை.
See Answer:

7. எந்த கால மனிதர்கள் பயிரிடும் முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை?
அ. பழைய கற்காலம்
ஆ. புதிய கற்காலம்
இ. உலோகக் காலம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
See Answer:

8. பழைய கற்கால மனிதர்கள் குகைகளில் ஓவியமாக தீட்டிய உயிரினங்கள்?
அ. யானை
ஆ. கரடி
இ. மான்
ஈ மேற்கண்ட அனைத்தும்.
See Answer:

9. பழைய கற்கால மனிதர்கள் எவ்வகையான வீடுகளில் வாழ்ந்தனர்?
அ. குடிசை மற்றும் கூரை வீடுகள்
ஆ. கல் வீடுகள்
இ. ஓட்டு வீடுகள்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
See Answer:

10. கூற்று - 1: பழைய கற்காலத்தின் பரிணாம வளர்ச்சியே புதிய கற்காலம் ஆகும்.
கூற்று - 2: பயிர்த் தொழில்களில் புதிய கற்கால மனிதர்கள் ஆர்வம் காட்டினர்.
அ. கூற்று - 1 மட்டுமே சரி
ஆ. கூற்று - 2 மட்டுமே சரி
இ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே சரி
ஈ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே தவறு.
See Answer:

11. கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால மனிதர்களின் முக்கிய கண்டுபிடிப்பு எது?
அ. வேளாண்மை
ஆ. தீ
இ. சக்கரம்
ஈ. வேட்டையாடுதல்.
See Answer:

12. தமிழகத்தில் புதிய கற்கால சான்றுகள் கிடைக்கப்பெற்ற இடங்கள்?
I. திருநெல்வேலி
II. சேலம்
III. புதுக்கோட்டை
IV. திருச்சி.
அ. I மட்டுமே சரி
ஆ. I, III மட்டுமே சரி
இ. II,IV மட்டுமே சரி
ஈ. I,II,III,IV அனைத்தும் சரி.
See Answer:

13. புதிய கற்கால மனிதர்கள் அறிந்திருந்த தொழில்கள்?
அ. பயிர்த் தொழில்
ஆ. நெசவுத் தொழில்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
See Answer:

14. புதிய கற்கால காலகட்டத்தில் தமிழகத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பயிர் வகை?
அ. சோளம்
ஆ. மணிலா
இ. கரும்பு
ஈ. பருத்த
See Answer:

15. பழங்காலத்தில் மண் தாழிகள் மீது பூசப்பட்ட வண்ணங்கள்?
அ. கருப்பு மற்றும் சிகப்பு
ஆ. வெள்ளை மற்றும் கருப்பு
இ. நீலம் மற்றும் சிகப்பு
ஈ. நீலம் மற்றும் பச்சை.
See Answer:

16. தமிழகத்தில், பெருங்கற்காலத்தின் போது நீத்தார் நினைவுச் சின்னமான
‘பெருங்கல்” கண்டெடுக்கப்பட்ட இடங்கள்?
I. காஞ்சிபுரம்
II. வேலூர்
III. திருவண்ணாமலை
IV. கடலூர்
V. திருச்சி
VI. புதுக்கோட்டை.
அ. II,IV,VI மட்டுமே சரி
ஆ. I,III,V மட்டுமே சரி
இ. I,II,IV,VI மட்டுமே சரி
ஈ. I,II,III,IV,V,VI அனைத்தும் சரி.
See Answer:

17. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில்; கிடைக்கப்பெற்ற மண் தாழிகளில் தங்கம், இரும்பினால் மற்றும்  வெண்கலத்தால் ஆன பொருட்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன?
அ. கீழடி
ஆ. அரிக்கமேடு
இ. ஆதிச்சநல்லூர்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
See Answer:

18. புதிய கற்கால மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய விலங்கு?
அ. குதிரை
ஆ. நாய்
இ. ஆடு
ஈ. காளை
See Answer:

19. இரும்புக் காலத்தைச் சேர்ந்த இரும்புக் கருவிகள் சென்னைக்கு அருகில்
கிடைக்கப்பெற்ற இடம்?
அ. இராயபுரம்
ஆ. கொரட்டூர்
இ. பல்லாவரம்
ஈ. பெரும்புதூர்.
See Answer:

20. பண்டைய காலத்தில் தமிழ் மக்கள் வணங்கிய கடவுள்?
அ. விநாயகர்
ஆ. இலக்குமி
இ. சரஸ்வதி
ஈ. முருகன்.
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.