இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 005

11. இவற்றில் தவறான சொல் மற்றும் அதற்கான பொருள் எது?
அ. பதுமை – உருவம்
ஆ. சேமம் - நலம்
இ. புரவி – செல்வம்
ஈ. கனகம் - பொன்
See Answer:

12. இவற்றில் தவறான வரிசை எது?
அ. மேழி – மோதிரம்
ஆ. கசடு – குற்றம்
இ. மாடு – செல்வம்
ஈ. கதி – துணை
See Answer:

13. முழவு என்ற சொல்லிற்கான சரியான பொருள் எது?
அ. வானம்
ஆ. மத்தளம்
இ. மலை
ஈ. வண்டு
See Answer:

14. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. சுடர் - மகிழ்ச்சி
ஆ. வினை – காவல்
இ. காப்பு – செயல்
ஈ. கேண்மை – நட்பு
See Answer:

15. இவற்றில் பொருத்தமற்ற பொருள் எது?
அ. நயம் - வீடு
ஆ. கிழமை - உரிமை
இ. ஆறு – நல்வழி
ஈ. உடுக்கை – ஆடை
See Answer:

16. இவற்றில் பொருத்தமான பொருள் எது?
அ. குழவி – நோய்
ஆ. பிண – மயக்கம்
இ. அளகு - கோழி
ஈ. ஆழி – வானம்
See Answer:

17. பொருத்தமான பொருள் சரியான வரிசை எது?
அ. அரவு – பாம்பு
ஆ. கடா - எருமை
இ. கள் - தேன்
ஈ. இவை அனைத்தும்
See Answer:

18. பொருத்தமான பொருள் தவறான வரிசை எது?
அ. சேடி - தோழி
ஆ. தார் - மாலை
இ. காசினி – நிலம்
ஈ. மல்லல் - அரசவீதி
See Answer:

19. பொருத்தமான பொருள் தேர்வு செய்க.
அ. மது – தேன்
ஆ. சம்பு – நாவல்
இ. மதியம் - நிலவு
ஈ. இவை அனைத்தும்
See Answer:

20. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. உபாயம் - மெய்யறிவு
ஆ. முகை – புன்னகை
இ. போது – மலர்
ஈ. பூகம் - மகரந்தம்
See Answer:


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.