Wednesday, 15 April 2020

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் )

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 6 (126 முதல் 150 வினாக்கள் - பொதுத் தமிழ் பிரிவு -ஆ (Part B) 1. வாயுரை வாழ்த்து என அழைக்கபடும் நூல் எது ?
  1. கம்பராமாயணம்
  2. பெரியபுராணம்
  3. திருக்குறள்
  4. சிலப்பதிகாரம்

 2. "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" - இக்குறள் இடம்பெற்ற அதிகாரம் எது ?
  1. ஒழுக்கம்
  2. பொறையுடைமை
  3. பொருள் செயல்வகை
  4. வினைத்திட்பம்

 3. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
  1. ஜி.யு.போப்
  2. பாரதியார்
  3. வீரமாமுனிவர்
  4. கால்டுவெல்

 4. நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ?
  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு
  3. பதினெண்மேல்கணக்கு
  4. பதினெண்கீழ்கணக்கு

 5. "வேளாண் வேதம் " என அழைக்கப்படும் நூல் எது ?
  1. திருக்குறள்
  2. நாலடியார் - கீழ்கண்ட எந்த வகையைச் சார்ந்தது ?
  3. புறநானூறு
  4. அகநானூறு

 6. இனியவை நாற்பது - நூலை இயற்றியவர் யார் ?
  1. காளமேகப்புலவர்
  2. பூதஞ்சேந்தனார்
  3. அவ்வையார்
  4. கபிலர்

 7. கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் உள்ளன ?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7

 8. “பம்பை வாவிப் படலம்” கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தைச் சார்ந்தது ?
  1. பாலகாண்டம்
  2. ஆரண்ய காண்டம்
  3. சுந்தர காண்டம்
  4. கிட்கிந்தா காண்டம்

 9. “The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்ற தலைப்பில் புறநானூறை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
  1. ஜி.யு.போப்
  2. தாமஸ் ஜெ.எட்வர்ட்
  3. யோர்ச். எல். அகார்ட்
  4. ராஜாஜி

 10. ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. “முல்லைத்திணைப் பாடல்களை” தொகுத்தவர் யார் ?
  1. ஓரம்போகியார்
  2. பேயனார்
  3. கபிலர்
  4. அம்மூவனார்

 11. 'நெடுந்தொகை' என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் எது ?
  1. நற்றிணை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. கலித்தொகை

 12. சிலப்பதிகாரம் -”புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களைக்கொண்டுள்ளது. இதில் மதுரைக்காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன ?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13

 13. அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணம் இடம் பெறும் காப்பியம் எது ?
  1. வளையாபதி
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. குண்டலகேசி

 14. வளையாபதி - எந்த சமயத்தை சார்ந்த நூல் ?
  1. வைணவம்
  2. சமணம்
  3. பெளத்தம்
  4. சைவம்

 15. முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தல் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ள நூல் எது ?
  1. நாலாயிரந்திவ்விய பிரபந்தம்
  2. திருவிளையாடற்புராணம்
  3. பெரியபுராணம்
  4. சீறாப்புராணம்

 16. கடம்பவன புராணம் - பாடியவர் யார் ?
  1. பரஞ்சோதி முனிவர்
  2. பெரும்பற்றப் புலியூர் நம்பி
  3. தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
  4. தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்

 17. வீரமாமுனிவர் எந்த நாட்டை சார்ந்தவர் ?
  1. தமிழ்நாடு
  2. இத்தாலி
  3. ஜெர்மனி
  4. இங்கிலாந்து

 18. தேம்பாவணி - நூல் யாரை காப்பிய மையமாகக் கொண்டு இயற்றப்பட்டது ?
  1. இயேசு கிறிஸ்து
  2. மரியாள்
  3. யோசேப்பு
  4. யோவான்

 19. மதுரைத் தமிழ்ச்சங்கம் “ராஜரிஷி” என்ற பட்டம் அளித்தது யாருக்கு ?
  1. ஜி.யு.போப்
  2. கால்டுவெல்
  3. வீரமாமுனிவர்
  4. ஸ்வார்ட்ஸ் பாதிரியார்

 20. "கலம்பகப் பாடல்கள்" - வரையறை என்ன ?
  1. கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30
  2. கடவுளர்க்கு 100, அரசர்க்கு -95,முனிவர்க்கு-90, அமைச்சர்க்கு- 70, வேளாளர்க்கு -50, வணிகர்க்கு- 30
  3. கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90, வணிகர்க்கு- 70, அமைச்சர்க்கு- 50, வேளாளர்க்கு -30
  4. கடவுளர்க்கு 100, முனிவர்க்கு-95, அரசர்க்கு -90 அமைச்சர்க்கு- 70, வணிகர்க்கு- 50 வேளாளர்க்கு -30

 21. பெத்தலகேம் குறவஞ்சி - நூலை இயற்றியவர் ?
  1. வீரமாமுனிவர்
  2. வேத நாயகம் சாஸ்திரியார்
  3. ஜி.யு.போப்
  4. அருமை நாயகம்

 22. மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The se​cret way" என்ற நூலை எழுதியவர் யார் ?
  1. ரிப்பன் பிரபு
  2. மொளண்ட்பேட்டன் பிரபு
  3. மின்டோ பிரபு
  4. லிட்டன் பிரபு

 23. “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!” எனப்பாடிய சித்தர் யார் ?
  1. அழுகணிச் சித்தர்
  2. கடுவெளிச் சித்தர்
  3. குதம்பைச் சித்தர்
  4. அகப்பேய் சித்தர்

 24. 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ? ABACUS முறை முதன்முதலில் பயன் படுத்தப் பட்ட நாடு ?
  1. குலசேகர ஆழ்வார்
  2. திருமூலர்
  3. சம்பந்தர்
  4. அப்பர்

 25. 'சீறாப்புராணம்' எழுதிய உமறுப்புலவர் எந்த மாவட்டத்தை சார்ந்தவர் ?
  1. வேலூர்
  2. தர்மபுரி
  3. தூத்துக்குடி
  4. திருநெல்வேலி


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: