Wednesday, 15 April 2020

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் )

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 5 (100 முதல் 125 வினாக்கள் - பொதுத் தமிழ் பகுதி )



  1. 'பாஞ்சாலி சபதம் ' பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ?
    1. தன்வினை வாக்கியம்
    2. செய்வினை வாக்கியம்
    3. செயப்பாட்டுவினை வாக்கியம்
    4. பிறவினை வாக்கியம்

  2. 'சேல்ஸ்மேன்' - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது
    1. செயலர்
    2. ஆய்வாளர்
    3. வியாபாரி
    4. விற்பனையாளர்

  3. பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ?
    1. அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கினேன்
    2. போஸ்ட் ஆபீசில் கார்டு வாங்கினேன்
    3. அஞ்சலகத்தில் அஞ்சல் கார்டு வாங்கினேன்
    4. அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன்

  4. பிரித்தெழுதுக : - செந்தமிழ்
    1. செ+தமிழ்
    2. செந்+தமிழ்
    3. செம்+தமிழ்
    4. செம்மை + தமிழ்

  5. தொடரும் தொடர்பும் அறிக : "சிந்துவுக்குத் தந்தை "
    1. அழ.வள்ளியப்பா
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. கண்ணதாசன்

  6. இலக்கணக்குறிப்பறிக : “புறம் புறம் “
    1. இரட்டைக் கிழவி
    2. அடுக்குத்தொடர்
    3. எண்ணும்மை
    4. உவமைத்தொடர்

  7. அகர வரிசையில் அடுக்கவும் : அன்பு ,காயம் , கண், இன்பம், உறவு, கேள்வி
    1. அன்பு,கண், காயம், கேள்வி, இன்பம், உறவு
    2. அன்பு, இன்பம், கண், காயம், இன்பம், கேள்வி, உறவு
    3. அன்பு, இன்பம், உறவு, கண், காயம், கேள்வி
    4. அன்பு, உறவு, கண், காயம், கேள்வி, இன்பம்

  8. “கிறிஸ்தவ கம்பர்” என அழைக்கப்படும் தமிழறிஞர் ?
    1. கண்ணதாசன்
    2. வீரமாமுனிவர்
    3. ஜி.யு.போப்
    4. எச்.ஏ.கிருஸ்ணபிள்ளை

  9. “குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ?
    1. சுருக்கமாக
    2. விசாலமாக
    3. விளக்கமாக
    4. வெளிச்சமாக

  10. “பிறவினை வாக்கியத்தை” கண்டறிக ?
    1. தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டினான்
    2. தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான்
    3. மஙகை நடனம் ஆடினாள்
    4. தாய் அன்பு உள்ளம் கொண்டவர்

  11. "குந்தித் தின்றால் குன்றும் மாளும் " - இவ்வுவமை கூறும் பொருள் என்ன ?
    1. சுறுசுறுப்பு
    2. சோம்பல்
    3. வேடிக்கை
    4. உழைப்பு

  12. மரபு பிழையற்ற தொடர் யாது ?
    1. மயில் கத்தும்
    2. மயில் கூவும்
    3. மயில் பாடும்
    4. மயில் அகவும்

  13. சந்திப்பிழை இல்லாத தொடரை தெரிக ?
    1. தமிழ்நாட்டை சேர்ந்தவர்
    2. தமிழ்ந் நாட்டை சேர்ந்தவர்
    3. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
    4. தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர்

  14. “மாண்பு” என்ற பெயர்ச்சொல்லின் வகை யாது ?
    1. சினைப் பெயர்
    2. பண்புப் பெயர்
    3. தொழிற்பெயர்
    4. இடப்பெயர்

  15. “தடந்தோள்” - இலக்கணக்குறிப்பு என்ன ?
    1. வினையெச்சம்
    2. வினையாலணையும் பெயர்
    3. உரிச்சொற்றடர்
    4. உவமை

  16. வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றவும் : "படி"
    1. படித்தான்
    2. படித்தல்
    3. படித்து
    4. படித்தவன்

  17. வினைச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை கண்டறிக : - கண்டான்
    1. காண்பது
    2. காண்
    3. காணுதல்
    4. காணும்

  18. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை குறிப்பிடுக : - “ பூ”
    1. பூமி
    2. நிலம்
    3. மலர்
    4. மணம்

  19. வழூஉச் சொல் நீக்கிய தொடரைத் தேர்க ?
    1. இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன்
    2. இன்று அவரைக்கா ஒரு கிலோ வாங்கியாந்தேன்
    3. இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கிறேன்
    4. இன்று அவரக்காய் ஒரு கிலே வாங்கி வந்திருக்கிறேன்

  20. பின்வஉம் பதத்திற்கு சரியான எதிர்ச்சொல்லை கண்டறிக : - "அருகு"
    1. பெருகு
    2. சிறுகு
    3. குறுகு
    4. தொலைவு

  21. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக ?
    1. மங்கை
    2. கிழவன்
    3. மடந்தை
    4. அரிவை

  22. 'கம்ப்யூட்டர்' - என்பதற்கு சரியான தமிழ் சொல்லைத் தெரிக ?
    1. கணிமின்னணு
    2. கணிப்பான்
    3. கணக்குக்கருவி
    4. கணிப்பொறி

  23. எவ்வகை வாக்கியம் : “தெய்வம் தெய்வம்” என்று எங்கு ஓடுகிறாய்
    1. வினா வாக்கியம்
    2. தன்வினை வாக்கியம்
    3. உணர்ச்சி வாக்கியம்
    4. பிறவினை வாக்கியம்

  24. பொருந்தாச்சொல்லை தெரிந்தெடுக்கவும் ? 
    1. சிலப்பதிகாரம்
    2. திருக்குறள்
    3. மணிமேகலை
    4. குண்டலகேசி

  25. 'இராவண காவியம்' என்ற நூலை எழுதியவர் யார் ?
    1. கண்ணதாசன்
    2. அண்ணாத்துரை
    3. புலவர் குழந்தை
    4. கம்பர்






SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: