இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள

நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு: இந்திய அரசமைப்புதான் உலகிலேயே நீளமான எழுதப்பட்ட அரசமைப்பாகக் கருதப்படுகிறது. மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் அவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்த பல்வேறு விதிகளை கொண்டுள்ளது. நமது அரசமைப்பை உருவாக்கிய மேதைகள் உலகின் பல அரசமைப்பு மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து நம் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர். தனிநபர் உரிமைகளை அடிப்படை உரிமைகளாகவும், அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளாகவும், நிர்வாகச் செயல்முறை விவரங்கள் என விரிவாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இறுக்கம், நெகிழ்வுத் தன்மை இரண்டும் கொண்ட தனித்துவம்: அதன் அமலாக்கச் செயல்முறைகளின் அடிப்படையில் இறுக்கமும் நெகிழ்வும் கொண்டதாக இந்திய அரசமைப்பு அழைக்கப்படலாம்.
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களே இந்தியாவை ஆள்கிறார்கள். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட அரசு என்றால் தனது உள்நாட்டு,வெளிநாட்டு விவகாரங்களை எந்தவிதமான வெளி அம்சங்களின் தலையீடு இன்றி நிர்வகிக்கும் என்பது ப�ொருளாகும். இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் 42-வது திருத்தச்சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் ப�ொருத்தப்பாட்டில் சமதர்மம் என்பது மக்களாட்சி வழியில் பரிமாணத்துவம், அஹிம்சை ஆகிய முறைகளைக் கையாண்டு சமதர்மம் சமூக இலக்குகளை எட்டுவதாகும். இந்தியாவில், சமதர்மம், முதலாளித்துவம் ஆகிய ப�ொருளாதாரங்கள் இணைந்த கலப்புப் ப�ொருளாதார முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவை ப�ொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது இந்தியாவில் அரசு மதம் என ஒன்றில்லை; அனைத்து மதங்களும் சமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதாகும். இந்தியக் குடியரசு என்பது இந்தியாவில் முடியரசு மூலமாக அல்லாமல் தேர்தல் மூலமாக அரசின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதாகும். 

நாடாளுமன்ற ஆட்சி முறை அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதால் நாடாளுமன்ற ஆட்சிமுறை என அழைக்கப்படுகிறது. நாடாளுமன்ற முறை அரசில் நிர்வாகம் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டது; நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்வரை அந்த அரசு நீடிக்கும். குடியரசுத்தலைவர் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இக்காலகட்டத்தில் அவரே நிர்வாகத் தலைவராகவும் அரசமைப்புத் தலைவராகவும் செயல்படுவார். இருந்தப�ோதும் பிரதமரே உண்மையான நிர்வாகத் தலைவர் ஆவார்; அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை வகிப்பார்; அமைச்சரவைக்கு மக்களவை பல்வேறு ப�ொறுப்புகளை வழங்கியுள்ளது. 

ஒற்றைக் குடியுரிமை இந்திய அரசமைப்பு ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது; ஒன்றிய அரசு வழங்கும் குடியுரிமையே அனைத்து மாநிலங்களுக்குமானது. 

வயது வந்தோர் வாக்குரிமை ’ஒரு நபர், ஒரு வாக்குரிமை’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் வயதுவந்தோர் அனைவருக்கும் ஒரே சீரான வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியாவில் அரசியல் சமத்துவத்தை இந்திய அரசமைப்பு தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. 18 வயது நிறைவடைந்தோர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள். தேர்தலில் வாக்களிப்பதில் இந்திய குடிமக்கள் இடையே சாதி, மதம், பால், இனம் அல்லது தகுதி அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.  

சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பு இந்தியாவில் இயங்கும் நீதி அமைப்பு அதன் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒருங்கிணைந்த இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றம் தலைமை அமைப்பாகவும் அதன் கீழே உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் எனவும் இயங்குகின்றன. 

அடிப்படை உரிமைகள் இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள சட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் அடிப்படை உரிமைகள் ஆகும். அவை மீறப்பட முடியாதவை. நெருக்கடி நிலை காலங்களில் சிலகுறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை (20- வது, 21-வது தவிர) விலக்கி வைக்கலாம். அப்போது, அசாதரணமான காரணங்களுக்காகத் திருத்தப்படலாம். அடிப்படை உரிமைகள் மீறப்படும் ப�ோது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றினை செயல்படுத்துகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.