அரசமைப்பின் பணிகள் மற்றும் முக்கியத்துவம்

அரசமைப்பின் பணிகள் மற்றும் முக்கியத்துவம

காலனி ஆட்சிக்காலத்தில் உருவான நமது தேசியத்தன்மை அரசியல் விடுதலைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளின் (பிற்காலத்தில் மாநிலங்களின்) ஒருங்கிணைப்பு, அரசமைப்பு மையமாதல் (சட்டமாதல்) மற்றும் மக்களாட்சிமயம் ஆகியவற்றுக்காகவும்  வந்துள்ளத.

இந்தியா ஒரு பண்பாட்டு வேற்றுமை கொண்ட நாடு என்ற திலும் இந்தியர்கள் அனைவரும் பல வகைகளில் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சார்ந்தும் ஒத்துழைப்புடனும் உள்ளனர். இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ சில குறிப்பிட்ட அடிப்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கொண்டிருப்பது அவசியமாகிறது. இத்தகைய விதிகள், ஒழுங்குமுறைகள் இல்லையென்றால் மக்களாட்சி நிலைத்திருக்காது. அந்நிலையில் மக்களின் நிலை பாதுகாப்பற்றதாக இருக்கும். காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியா ஆங்கிலேய அரசால் பிறப்பிக்கப்பட்ட சாசனங்கள் (Charters), ஆட்சிக்குழு சட்டங்கள் (council Acts), காலனியாட்சிக்கால இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India act) ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ஆளப்பட்டது. புதிதாக எழுச்சிபெற்ற இந்தியாவின் இயக்கங்களும் அதன் தலைவர்களும் ஒரு வரையறுக்கப்பட்ட எழுதப்பட்ட புதிய அரசமைப்பின் அடிப்படையில் புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்பதை விரும்பினர். மைய (மத்திய) சட்டமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. மாநிலங்களின் (அரசுகளின்) ஒன்றியமாக, பல் பிரிவுகளுக்கும் ஒருமைப்பாட்டினையும் ஒருங்கிணைப்பையும் வழங்கும் கூட்டாட்சியை உருவாக்கும் வண்ணம் சமூகத்தில் நிலவும் பல் அடுக்கு பிரிவுகள், வகைமைகள் ஆகியன அனைத்தையும் ஒரே அரசாட்சியின் கொடையின்கீழ் கூட்டிணைக்கும் வகையில் புதிய அரசமைப்பை முன்மொழிய வேண்டியிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.