முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும -3

ஜப்பானின் வலிய கர அரசியல் விவேகம்:
 1905க்குப் பின்வந்த ஆண்டுகளில் கொரியாவின் உள்நாட்டு அயல்நாட்டுக் கொள்கைகளை ஜப்பான் கட்டுப்படுத்தியது. ஒரு முக்கியமான ஜப்பானியத் தூதரக அதிகாரி ஒரு கொரியரால் கொல்லப்பட்டதைக் காரணமாகக் கொண்டு 1910இல் கொரியாவை ஜப்பான் இணைத்துக்கொண்டது. 1912இல் மஞ்சு அரசவம்சம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து சீனாவில் நிலவிய குழப்பம் மறுபடியும் விரிவாக்கத்திற்கான வாய்ப்பை ஜப்பானுக்கு அளித்தது. சீனாவில் ஷான்டுங் பகுதியின் மீது ஜெர்மனி கொண்டிருக்கும் உரிமைகள் தனக்கு மாற்றி வழங்கப்படவேண்டும், மேலும் இரண்டு ஜப்பானிய ஆலோசகர்களைச் சீனஅரசாங்கம், பதவியில் அமர்த்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தது. இவ்வலிய அரசியல் விவேகம் ஜப்பான் சீனாவோடும் ஐரோப்பிய நாடுகளோடும் பகையை மூட்டிவிட்டது. ஆனால் ஜப்பானை எதிர்க்கும் நிலையில் யாரும் இல்லை. 

காலனிகள் அமைக்கப்படுதலும் போர்களும்:
 1876இல் ஆப்பிரிக்காவின் பத்து சதவீதப் பகுதிகள் மட்டுமே ஐரோப்பாவின் ஆட்சியின் கீழிருந்தன. 1900இல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் காலனியாக ஆக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் கண்டத்தை தங்களுக்குள்ளே பகிர்ந்துகொண்டன. ஒரு சில இடங்கள் ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் விட்டுத்தரப்பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகியன சீனாவில் தங்களுக்கென ‘செல்வாக்கு மண்டலங்களை’(Spheres of Influence) நிறுவின. ஜப்பான் கொரியாவையும
தைவானையும் தன்வசப்படுத்திக்கொண்டது. இந்தோ-சீனாவைபிரான்ஸ்கைப்பற்றிக்கொண்டது. ஸ்பெயினிடமிருந்து பிலிப்பைன்ஸை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. இங்கிலாந்தும் ரஷ்யாவும் ஈரானைப் பிரித்துக்கொள்ளச் சம்மதித்தன. ஆப்பிரிக்காவில் காலனிகளை நிறுவ ஐரோப்பியர் மேற்கொண்ட தொடக்ககால முயற்சிகள் ரத்தக் களரியான போர்களில் முடிந்தன. அல்ஜீரியாவையும் செனகலையும் கைப்பற்ற பிரான்ஸ் ஒரு நெடிய, கடுமையான போரைச் செய்யவேண்டியதாயிற்று. இங்கிலாந்து 1879இல் ஜூலுக்களாலும் 1884இல் சூடான் படைகளாலும் தோற்கடிக்கப்பட்டது. இத்தாலியப்படை 1896ஆம் ஆண்டு அடோவா போர்க்களத்தில் எத்தியோப்பியப் படைகளிடம் பெருத்த சேதத்துடன் கூடிய தோல்வியைச் சந்தித்து இருந்தபோதிலும் ஐரோப்பியப் படைகளே இறுதியில் வெற்றி பெற்றன. 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.