முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும -2

ஐரோப்பா :
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பிய சக்திகள் உலகின் ஏனைய பெரிய, சிறிய நாடுகளைக் காலனியப்படுத்தி, தங்களின் நலனுக்காக அவற்றைச் சுரண்டின. 1880 காலப்பகுதியில் பெரும்பாலான ஆசிய நாடுகள் காலனிமயமாக்கப்பட்டுவிட்டன. ஆப்பிரிக்கா மட்டுமே விடுபட்டிருந்தது. 1881-1914ஆம் ஆண்டுகளு க் கி டையே ஆப்பிரிக ் காவும் கைப்பற்றப்பட்டு, பிரிக்கப்பட்டு, காலனிகளாக ஆக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில், தொழில்துறையில் ஜெர்மனி புரிந்த சாதனைகள், அதற்கு ஐரோப்பாவில் ஒரு மேலாதிக்கநிலையை வழங்கியது. காலனியாதிக்கப் போட்டிக்குள் ஜெர்மனி நுழைந்தபோது, உலகமானது பெரும்பாலும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. விரிவாக்கம் செய்ய வெற்றிடங்கள் இல்லாததால் ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்குள்ளேயே அடுத்த நாட்டிற்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்ற முயன்றன. ஐரோப்பாவில் 1870ஆம் ஆண்டிற்குப் பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் காலனியாதிக்கப் போட்டியில் கலந்துகொண்டன. 

வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள்:
தொழில்வளர்ச்சியில் முதன்மை இடத்தை வகித்தாலும் பரந்துவிரிந்த பேரரசைக் கட்டுப்படுத்தினாலும் இங்கிலாந்திற்கு மனநிறைவு ஏற்படவில்லை. இங்கிலாந்து ஜெர்மனியோடும் அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது. ஏனெனில் அந்நாடுகள் விலைமலிவானப் பண்டங்களை உற்பத்தி செய்து அதன்மூலம் இங்கிலாந்தின் சந்தையையுமகைப்பற்றின. நாடுகளுக்கிடையிலான இப்போட்டி, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வல்லரசுகளுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படக்காரணமாயிற்ற

ஆசியா: ஜப்பானின் எழுச்சி ஆசியாவில், ஜப்பான் இக்காலப்பகுதியில் (மெய்ஜி சகாப்தம் 1867-1912), மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றிப் பலதுறைகளில் அவற்றுக்கு நிகராக மாறியது. ஜப்பான் தொழில்துறையில் சிறந்த நாடாகவும் அதேசமயத்தில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாகவும் ஆகியது. ஆட்சியாளர்கள் நிலமானியமுறை சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் ஜப்பான் மேலைநாட்டுக் கல்வியையும் இயந்திரத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டது. நவீன ராணுவம், கப்பற்படை ஆகியவற்றுடன் தொழில்துறையில் முன்னேறிய நாடாக ஜப்பான் மேலெழுந்தது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஜப்பான் ஐரோப்பிய சக்திகளை அடி பிசகாது அப்படியே பின்பற்றியது. 1894 இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது. இச்சீன-ஜப்பானியப் போரில் (1894-1895) சீனாவைச் சிறியநாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது. இப்போரில் ஜப்பான் பெற்ற வெற்றி ஐரோப்பிய சக்திகளால் விரும்பப்படவில்லை. தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகளின் எச்சரிக்கையை மீறி ஜப்பான் லியோடங் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்துக்கொண்டது. இந்நடவடிக்கை மூலம் கிழக்கு ஆசியாவில் தானே வலிமை மிகுந்த அரசு என ஜப்பான் மெய்ப்பித்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.