முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும 1

(அ) காரணங்கள்:
 ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும் 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன. ஒரு முகாம் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன. இதன்படி ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ளும். மற்றொரு முகாமில் பிரான்சும் ரஷ்யாவும் அங்கம் வகித்தன. 1894இல் மேற்கொண்ட உடன்படிக்கையின்படி இவ்விரு நாடுகளில் ஏதாவதொன்று ஜெர்மனியால் தாக்கப்படும்பட்சத்தில் பரஸ்பரம் துணைநிற்கும் என உறுதிசெய்யப்பட்டது. இப்படியாக இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டது. தன்னுடைய தனித்திருத்தலிலிருந்து வெளிவரும் பொருட்டு இங்கிலாந்து இருமுறை ஜெர்மனியை அணுகித் தோல்வி கண்டது. ரஷ்யாவின் மீதான ஜப்பானின் பகைமை அதிகமானபோது பிரான்ஸ் ரஷ்யாவின் நட்புநாடாக இருந்ததால் ஜப்பான் இங்கிலாந்துடன் இணைய விரும்பியது (1902). ஆங்கிலோ-ஜப்பான் உடன்படிக்கை பிரான்சை இங்கிலாந்தோடு உடன்படிக்கை செய்துகொள்ளத் தூண்டியது. அதன் மூலம் மொராக்கோ, எகிப்து ஆகிய காலனிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்பியது. இதன் விளைவாக 1904இல் இருநாடுகளிடையே நட்புறவு ஒப்பந்தம ஏற்பட்டது. மொராக்கோவில் பிரான்சு சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படும் பட்சத்தில் எகிப்தை இங்கிலாந்து கைப்பற்றியதை அங்கீகரிக்க பிரான்ஸ் உடன்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், திபெத் தொடர்பாக ரஷ்யாவுடன் இங்கிலாந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இவ்வாறு இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்:
 தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமான பங்காற்றியது. ஏனைய நாடுகளைப் பற்றிய செய்திகளைத் திரித்துக் கூறுவதன் மூலம் பத்திரிகைகள் தேசிய வெறியைத் தட்டி எழுப்பின.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு:
 மனப்பாங்கு ஜெர்மன் பேரரசரான இரண்டாம்கெய்சர்வில்லியம் இரக்கமற்ற தன்முனைப்புக் கொ ண ்ட வ ரா கவும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவராகவுமிருந்தார். ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார். ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது. 1805இல் டிரபால்கர் போரில் நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து கடல் இங்கிலாந்தின் தனியுரிமை எனக்கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் அதன் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்து, ஜெர்மன் கப்பற்படை தனக்கு எதிரானதே என முடிவு செய்தது. ஆகவே இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தத

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
 பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர். 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர். மொராக்கோ விவகாரத்தில் ஜெர்மனியின் தலையீடு இக்கசப்புணர்வை மேலும் அதிகரித்தது. மொராக்கோவில் பிரான்சின் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனிஎதிர்த்தது. எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினா
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.