Tuesday, 3 March 2020

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும -1

முதலாளித்துவ நாடுகளின் சந்தைகளுக்கான போட்டி:
 முதலாளித்துவம் சார்ந்த தொழில்களின் ந�ோக்கம் மிகை உற்பத்தி செய்வதாகும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட உபரிச் செல்வம் மென்மேலும் தொழிற்சாலைகள் அமைக்கவும் இருப்புப்பாதை அமைக்கவும் நீராவிக்கப்பல்கள் கட்டவும் அல்லது இவை போன்ற பிறவற்றிற்கும் பயன்படுத்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகவல்பரிமாற்றம், போக்குவரத்து ஆகிய துறைகளில் ஏற்பட்ட புரட்சியானது ஆப்பிரிக்காவிலும் ஏனைய பகுதிகளிலும் ஐரோப்பிய விரிவாக்கம் அரங்கேறத் துணைபுரிந்தன. முதலாளித்துவம் மிகப்பெரும் முரண்களை ஏற்படுத்தின. அம்முரண்கள் அதிகளவு வறுமை, அதிகளவு செல்வக்குவிப்பு, குடிசைப்பகுதிகள், விண்ணைமுட்டும் கோபுரங்கள், பேரரசுகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் சுரண்டப்பட்ட காலனிகள.
போன்றவையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கருத்தைக் கவரும் ஒரு அம்சம் யாதெனில் ஐரோப்பா, மேலாதிக்க சக்தியாக உருப்பெற்றதும் ஆசியாவும் ஆப்பிரிக்காவும் காலனிகளாக்கப்பட்டு சுரண்டப்பட்டதுமாகும். ஐரோப்பிய நாடுகளிடையே இங்கிலாந்து ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக முதலாளித்துவத்துக்குத் தலைமையாகவும் விளங்கியது. சந்தை, கச்சாப்பொருள் ஆகியவற்றுக்கான தேவைகள் வளர்ந்து கொண்டேயிருந்ததால் சுரண்டுவதற்காகத் தங்கள் பேரரசை விரிவாக்கம் செய்ய முதலாளித்துவ நாடுகள் உலகத்தைச் சுற்றிப் போட்டியில் இறங்கின.

முற்றுரிமை முதலாளித்துவத்தின் எழுச்சி:
1870ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுதந்திரப்போட்டி முதலாளித்துவமானது முற்றுரிமைகளின் முதலாளித்துவமாக மாறியது. ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கியப் பண்புக்கூறான தொழில், நிதி ஆகிய இரண்டும் அணிசேர்ந்து சந்தைகளில் தங்களின் பொருள்கள் மற்றும் மூலதனத்திற்கான லாபத்தைத் தேடுமென்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெளிவாக உணரப்பட்டது. சுதந்திரவணிகம் எனும் பழையக்கோட்பாடுசரிந்துவீழ்ந்தது. அமெரிக்காவில் கூட்டு நிறுவனங்களும் ஜெர்மனியில் வணிகக் கூட்டிணைப்புகளும் உருவாயின. அதிகாரமிக்க இக்கூட்டு நிறுவனங்களும் கூட்டுரிமைக் குழுக்களும் அரசுகளின் மீது மேலாதிக்கம் செலுத்தின. 

ஏகாதிபத்தியமும் அதன் முக்கியப் பண்புக்கூறுகளும்:
 முதலாளித்துவம் தவிர்க்க இயலாமல் ஏ க ா திபத்தியத்திற்கு இட்டு ச்செ ல் கி ற து . மு த ல ா ளித்துவத்தின் உ ச்ச க ட்டமே ஏகாதிபத்தியமென லெனின் கூறுகிறார். மிகப்பெருமளவிலான உற்பத்தி செயபொருட்களுக்குச் சந்தைகள் மட்டுமல்லாமல் பெ ரு ம ளவில ா ன க ச்சாப் ப ொ ரு ள ்க ளு ம் தேவைப்பட்டன. அனைத்து இடங்களிலும், முற்றுரிமை முதலாளித்துவத்திற்கு ரப்பர், எண்ணெய், நைட்ரேட், சர்க்கரை, பருத்தி வெப்ப மண்டலப் பகுதிகளைச் சார்ந்த உணவுப் பொருள்கள், கனிமங்கள் ஆகிய கச்சாப்பொருள்கள் தேவைப்பட்டன. கச்சாப்பொருள்களின் மூலங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதின் அவசியம் தவிர்க்க இயலாமல்ஏகாதிபத்தியத்திற்குஅழைத்துச்சென்றது. ஏகாதிபத்தியம் என்பது காலனிகளைப்பற்றியது மட்டுமல்ல, அது ஒரு முழுமையான முறையாக ராணுவமயமாக்கத்திற்கும் முழுமையான போருக்கும் இட்டுச்சென்றது

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: