அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் தனித்தன்மை

அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும். இதனை இந்தியாவில் சமூக, ப�ொருளாதார நீதியை நிலைநாட்டும் வண்ணம் அரசு அவற்றை அமலாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் எனலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது. இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை, ந�ோய்வாய்படுதல், உடல் வலிமை கொண்டோர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், ப�ொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ளபாகுபாடுகள் ப�ோன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு கொள்கை வழிகாட்டு நெறிகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக நிலைநாட்டப்பட முடியாது என்றாலும் நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

பஞ்சாயத்து ராஜ் – காந்தி (எதிர்) அம்பேத்கர் மத்திய அரசிடம் குறைந்த அளவிலான அதிகாரம் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பிய காந்தி பாரம்பரிய வழக்கமான முறைபடி கிராமத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு கிராமங்கள் தமக்குத் தாமே ஆட்சி செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அம்பேத்கரின் கருத்துப்படி, கிராமம் என்பது வகுப்பு வாதம், சாதியமைப்பு ப�ோன்ற கொடுமையான யதார்த்தத்தைக் கொண்டுள்ளன; இதனால் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும் என்று கருதினார். ஆனால், சிறப்பான உள்ளாட்சி அரசாங்கத்தின் மூலமாக மட்டுமே மக்கள் அதிகாரம் செலுத்தமுடியும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தறியும் வகையில் காந்தி தனது சமூக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டார். “இந்தியாவில் வாழும் கடைகோடி ஏழைகூட இது தனது நாடு என்று உணரும் நிலையை உருவாக்கி, அதில் அவரது குரல் வலுவாக உயரும் வகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்” என்றார். பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூலமாக மக்களின் கரங்களில் அதிகாரம் இருக்க வேண்டியதன் தேவையை காந்தி எப்போதும் வலியுறுத்தி வந்தார். “மக்களிடம் எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இது மக்களுக்குச் சிறந்த பயன் அளிக்கும்” என்று காந்தி கூறினார். அம்பேத்கர் கருத்துப்படி, “கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்புவாதத்தின் இருப்பிடம்” என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. கிராமங்களில் உள்ள ஆதிக்கமும் செல்வாக்கும் கொண்ட சமுதாயங்கள் தங்கள் ஏகப�ோகத்தை நிலைநாட்டிக் கொண்டு இதர சமுதாயங்களுக்குக் குரல் இல்லாமல் செய்கிறார்கள் என்றார். இதன் விளைவாக, அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்பில் பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்திய அரசமைப்பு சட்டம் பாகம் IV அரசுக் கொள்கை வழிகாட்டு நெறிகள் என்னும் பிரிவில் கிராம பஞ்சாயத்துகளை உருவாக்குவதற்கான ப�ொறுப்பினை மாநிலச் சட்டமன்றங்களுக்கு அளிக்கும் வகையில், ஒரு விதி கிராம சுயராஜ்ஜியம் என்ற எனது கருத்து, அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கான சுதந்திரம், மற்ற இதர சார்பு தேவைப்படுவதால் சார்புத் தன்மையும் கொண்ட முழுமையான குட 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.