அரசின் கட்டமைப்பு
இந்திய அரசமைப்பின் முன்னுரையில்
இந்தியாவை ஒரு இறையாண்மை, சமதர்ம,
மதசார்பற்ற, மக்களாட்சி மற்றும் குடியரசு
பெற்ற நாடு என்று அறிவிக்கிறது. இங்கு
இங்கிலாந்தைப் போல் முடியாட்சியாக அதாவது
அரசரோ, அரசியோ மன்னர்களாக ஆட்சியில்
ஒன்றிய ஆட்சித்துறை
இந்தியக் குடியரசுத்தலைவர்
இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்
பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள்
மற்றும் அமைச்சரவைக் குழு
இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளால்தான் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு இந்தியக் குடியரசுத்தலைவர்
தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேசிய அரசின்
அனைத்து அரசமைப்புத் துறைகளின்
தலைவராக இந்தியக் குடியரசுத்தலைவர்
விளங்குகிறார். (எ.கா.) சட்டம், நிர்வாகம், நீதி
மற்றும் ஆயுதப்படை ஆகிய துறைகளின்
செயல்பாடுகளை குடியரசுத்தலைவர்
மேற்பார்வையிடுகிறார். மேலும் அரசமைப்புச்
சட்டங்களுக்குட்பட்டு இத்துறைகள்
செயல்படுவதை இவர் உறுதிப்படுத்துகிறார்.
இந்திய நாட்டின் முழு அரசமைப்பு,
பிரதிநிதித்துவம் மற்றும் மாநில
செயல்பாடுகளை ஒவ்வொரு மண்டலத்திலும்
குடியரசுத்தலைவர் நிலை நிறுத்துகிறார்.
ஆனால் அமெரிக்க குடியரசுத்தலைவரை
போல் உண்மையான செயல் அதிகாரம்
இல்லாமல் பெயரளவில் மட்டும் அதிகாரத்க�ொண்டுள்ளார். குடிரயரசுத்தலைவரது
பெயரால், அவரது தலைமையில் அல்லது
மேற்பார்வையில் நிர்வாகம் நடைபெறுகின்றதே
தவிர, நேரடியான, செயலளவிலான நிர்வாகம்
பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள்
குழுவிடம்தான் உள்ளது. அந்த
அமைச்சரவையும் நாடாளுமன்றத்திற்கு
பொறுப்புடையது. இதைத்தான் நாடாளுமன்ற
ஆட்சிமுறை என்கிறார்கள். மேலும்
நடைமுறையில் உண்மையான அதிகாரங்கள்
அனைத்தும் பிரதமர் தலைமையிலான
அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக்
குழுவிடம் உள்ளது. இவ்வாறு இந்தியக்
குடியரசானது அமெரிக்க குடியரசிலிருந்து
வேறுபடுகிறத
குடியரசுத்தலைவர்:
இந்தியத் தேசத்தின் தலைவராக
குடியரசுத்தலைவர் இருக்கிறார். அவர்
இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். மேலும்,
தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும்
நிலைத்தன்மை சின்னமாக அவர் திகழ்கிறார்.
குடியரசுத்தலைவர் தகுதி மற்றும் தேர்தல்
உறுப்பு 58;
1. இந்தியக் குடியரசுத்தலைவருக்கான
தகுதிகள்
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
35 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க
வேண்டும்.
ஒரு மக்களவை உறுப்பினராவதற்கான
அனைத்து தகுதிகளும் க�ொண்டிருத்தல்
வேண்டும்.
2. மத்திய மாநில அல்லது உள்ளாட்சி
அமைப்புகளிலோ அவற்றின் கட்டுப்பாட்டில்
உள்ள எந்த ஒரு அமைப்பிலோ ஆதாயம்
தரக்கூடிய எந்த பதவியில் இருந்தாலும்,
அவர் குடியரசுத்தலைவர் தேர்தலில்
போட்டியிட தகுதியற்றவராகிறார்.
மேலும் அரசமைப்பின் 52-வது உறுப்பு
குடியரசுத்தலைவர் பதவிக்கான
குறைந்தபட்சம் 50 தேர்வுக்குழு
வாக்காளர்களால் முன்மொழிவு செய்யப்பட
வேண்டும் என்றும், மேலும் வேட்பாளர்
தேர்வுக் குழுவின் 50 உறுப்பினர்கள் மூலம்
வழிமொழியப்பட வேண்டும் என்று
வலியுறுத்துகிறது. மேலும் ஒவ்வொரு
வேட்பாளரும் ₹.15,000/-ஐ இந்திய ரிசர்வ்
வங்கியில் வைப்பு தொகையாக கட்ட
வேண்டும்.
பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு
பங்கை ஒரு வேட்பாளர் பெறவில்லையெனில்
இந்த தொகை அவருக்கு திருப்பித்தரப்படாது.
இந்தியக் குடியரசுத்தலைவர் மக்களால்
நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை.
மாறாக, கீழ்கண்டவர்களை உறுப்பினர்களாக
க�ொண்ட வாக்காளர் குழுவினால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்:
நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
மாநிலங்களின் சட்டசபைகளின்
கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்.
டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன்
பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கு.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள
0 Comments: