இந்திய அரசமைப்புச் திருத்தச்சட்டங்கள்

இந்திய அரசமைப்புச் திருத்தச்சட்டங்கள் மாறி வரும் சமுதாயத் தேவைகளுக்கேற்ப அரசமைப்பில் திருத்தங்கள் கொண்ட வருவதற்கான விதிகளையும் நமது அரசமைப்புற்கு மேதைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே, நமது அரசமைப்பு சட்டத்தின் மாண்புகள் மற்றும் அதன் அடித்தளத்திற்கு பங்கம் நேராமல் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசமைப்பைப் பாதுகாப்பதிலும் அரசமைப்பிற்கு விளக்கமளிப்பதிலும் நமது நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. இதர அரசமைப்புகள் ப�ோலவே நமது அரசமைப்பு மாறி வரும் சூழல்கள் மற்றும் அரசியல் நெருக்கடியில் ஏற்ப தன்னை தகவமைக்கும் ஆவணமாக திகழ்கிறது. இந்திய அரசமைப்பு முதன்மை சட்டமாக தனக்குள் செயல்பட்டு கொண்டு இந்திய அரசையும் இயக்குகிறது. நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய மேதைகள் தொலைந�ோக்கு பார்வையுடன் எதிர்கால பிரச்சனைகளை முன்உணர்ந்து அவற்றிற்கு தீர்வுகளை வழங்கியுள்ளனர். மாறி வரும் சமுதாய சூழல்களுக்கு ஏற்ப தேவையான திருத்தங்களுக்கு இந்திய அரசமைப்பு இடம் அளித்து ஏற்கிறது. அமலாக்கத்தில் ப�ோதுமான நெகிழ்வுத் தன்மை கொண்டுள்ளதால் ஒரு இறுக்கமான சட்டப்புத்தகமாக நமது அரசமைப்பு மாறாமல் உயிரோட்டமான ஆவணமாகத் திகழ்கிறது. அரசமைப்பு சட்டத்தின் அடித்தளத்தினை நிலையான மாறாத உன்னத ஆவணமாக உருவாக்கியுள்ள அதே சமயத்தில் அது என்றும் நிலையான மாற்றமுடியாத ஆவணம் அல்ல என்பதையும் நமது அரசமைப்பு சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ‘நெகிழ்வுத் தன்மை’ கொண்டதாகவும் தேவையின்றி அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுத்துவதைதடுக்கும் வகையில் ‘இறுகியத் தன்மை’ கொண்டதாகவும் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 368இன் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பிற்கு அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு சட்டத்திலும் சேர்த்தல், நீக்கம், மாறுதல் கொண்டுவர அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு கூட்டாச்சி அரசியலமைப்பை கட்டமைத்துள்ளதால் மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகாரங்களில் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மாற்றம் கொண்டு வர முடியாது. நமது அரசு சட்ட மேதைகள் சில விதிகளை அரசமைப்பில் மையக் கருத்துகளை மாற்றங்களிலிருந்தும் சமரசங்களிலிருந்தும் பாதுகாக்க விரும்பினர். அரசமைப்புச்சட்ட மேதைகளின் இக் கருத்துகள் பல்வேறு வழிகளிலான அரசமைப்புச் திருத்தச்சட்டங்களுக்கு வழிவகுத்தத

மூன்று வகையான அரசமைப்புத் திருத்தச் சட்டம் வகைகள் உள்ளன அவை பின்வருமாறு 
1) தனி பெரும்பான்மை(சேர்த்தல்) 
2) நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை பெறுவதன் மூலம் திருத்தச்சட்டம் கொண்டு வருதல். (அவையில் இருப்போரில் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 50 விழுக்காடு) 
3) பெரும்பான்மை பெறுவதுடன் மொத்தமுள்ள மாநிலச் சட்டமன்றங்களில் சரிபாதி சட்டமன்றங்களின் ஒப்புதல் பெறுதல். இந்த வகைகளிலான அனைத்து திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும். அரசமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி எந்தவொரு அரசமைப்புச் திருத்தச்சட்டத்திற்கும் ப�ொது வாக்கெடுப்பு தேவைப்படவில்லை. சட்டத்திருத்த முன்வரைவு அனைத்தும் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இவ்வாறு அனுப்பப்படும் அரசியல் சட்ட முன்வரைவுகளை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்குக் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே அரசியல் திருத்தச்சட்டம் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.