மாநிலங்களவையில் சி.என். அண்ணாதுரை உரை

மாநிலங்களவையில் சி.என். அண்ணாதுரை உரை இந்திய அரசமைப்பு உறுப்பு 343 ஒன்றிய அரசில் அலுவல் மொழி 1963க்குப் பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறுகிறது. இதையொட்டி, சி.என்.அண்ணாதுரை ஆட்சி மொழிகள் சட்ட முன்வரைவு, 1963 அறிமுகம் செய்யப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற உரையாடலில், சி.என்.அண்ணாதுரை பேசியது: “இந்தியா ஒரு ப�ொது மொழியை கொண்டிருக்க வேண்டும் என்றும் இக்கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டால் இந்திய மொழிகளில் ஒன்று ப�ொது மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மிக பலபல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இதில் எவருக்கும் ஐயமில்லை. இந்தியா ஒரு ஒற்றை அரசு என்றால் இந்த வாதம் தர்க்க ரீதியானது தான். ஆனால், இந்தியா ஒரு கூட்டாட்சி அரசு. இந்திய சமுதாயம் பன்மைத்துவம் கொண்ட சமுதாயம். நமத அரசமைப்பு ஒரு கூட்டமைப்பு. ஒரு பன்மைத்துவ சமுதாயத்தில், ஒரு கூட்டு அரசமைப்பில் ஒற்றைப் ப�ொது மொழி கோரி வாதிடுவது அநீதியை உருவாக்கும், சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இடையே அறியாமையை உருவாக்கும் என்றே நினைக்கிறேன். இந்தியா ஒரு நாடு அல்ல. பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டுள்ளது. இந்தியா பல்வேறு மொழிக் குழுக்களைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியா ஒரு துணைக் கண்டம் என்று அழைப்பதே சரியாகும். எனவேதான், ஆட்சி மொழியாக ஒரு ப�ொது மொழியை நம்மால் காண இயலவில்லை. அரசு வந்தே மாதரம், ஜன கன மண என இரு தேசிய கீதங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. இரு தேசிய கீதங்களில் ஒன்று கூட இந்தி மொழியில் எழுதப்பட வில்லை. அவை, வங்க மொழியில் பிறந்தவை. இந்தியாவில் 42 விழுக்காடு மக்கள் பேசும் மொழி என்பதால் இந்தி மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 42 விழுக்காடு என்பது நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு எல்லைகளுக்கு இடையே பரவலாக பரவி இருக்குமானால் இந்த வாதம் தர்க்கரீதியானது, அறநெறியானது என்று ஏற்கலாம். ஆனால், இந்த 42 விழுக்காடும் ஒரே இடத்தில் நெருக்கமாக அடர்த்தியாக குவிந்து உள்ளது. பரவலாக காணப்படவில்லை. எனவே, 42 விழுக்காடு என்ற கருத்து பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் இந்தியாவில் குறிப்பிட்ட, குவிக்கப்பட்ட பகுதிக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். அதே சமயம், இதர பகுதிகளுக்கு நிரந்தரமாக எதிராக நிற்கிறீர்கள். எனவே, 42 விழுக்காடு என்ற கருத்து பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ள கூடாது. ஒருவேளை இந்தி மொழி இந்தியா முழுவதும் பரவலாக பேசப்படும் மொழியாக 20 விழுக்காடு மக்களிடம் காணப்பட்டாலும் கூட, அனைத்து மொழிகளிலும் இந்தி மொழியே குமரி முதல் இமயம் வரை அறியப்படும் மொழியாக நாம் கூறலாம். இந்திய மக்களின் 20 விழுக்காட்டினர் இந்தி மொழி அறிவார்கள். எனவே, இந்தி ஆட்சி மொழியாகட்டும். என்னால் அதனை ஆதரிக்க முடியாது எனிலும், புரிந்து கொள்ள முடியும். அதன் பின் உள்ள தர்க்கம் புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், உத்திரப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடர்த்தியாக வாழும் இந்த 42 விழுக்காடு கருத்தின் பின்னணியில் என்ன தர்க்கம் உள்ளது.”

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.