சட்டம் - சட்ட முன்வரைவு - பதவி பிராமணம்

 சட்டம்: ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறும் ப�ோது சட்டம் எனப்படுகிறது. 
 சட்ட முன்வரைவு: நாடாளுமன்றத்தில் ஈரவைகளின் ஏற்பு கோரி முன்மொழியப்படும் சட்ட வரைவு சட்ட முன்வரைவு எனப்படும். 
 உட்பிரிவு: ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி. 
 தீர்மானம்: நாடாளுமன்றத்தின் தீர்வு, நடவடிக்கை, கருத்து கோரி நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது தீர்மானம் எனப்படும் 
 பதவி பிராமணம்: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தமது உறுதிப்பாட்டினைத் தெரிவித்து கடவுள் பெயராலோ, பகுத்தறிவின் பெயராலோ உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும். 
 கேள்வி நேரம்: ஒவ்வொரு நாளும் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒதுக்கப்படுகிறது. 
 கோரம்: நாடாளுமன்ற அவை அல்லது பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்படும் குழுக்களின் கூட்டத்தொடர் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் எனப்படுகிறது. அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் என வகுக்கப்பட்டுள்ளது. 
 கூட்டத்தொடர்: ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரால் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றம் செயல்புரியும் குறிப்பிட்ட கூட்டத்தின் கால அளவு கூட்டத்தொடர் எனப்படும். 
 நிலைக்குழு: ப�ொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அல்லது அவ்வப்போது அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது அவைத் தலைவரால் நியமிக்கப்படும் குழு நிலைக்குழு எனப்படும். 
 அரசு: மத்திய அரசாங்கம், இந்திய நாடாளுமன்றம், மாநில அரசாங்கங்கள், மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள், இந்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது அரசு ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.