வயது வந்தோர் வாக்குரிமை
’ஒரு நபர், ஒரு வாக்குரிமை’ எனும்
கோட்பாட்டின் அடிப்படையில் வயதுவந்தோர்
அனைவருக்கும் ஒரே சீரான வாக்குரிமை
அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியாவில்
அரசியல் சமத்துவத்தை இந்திய அரசமைப்பு
தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. 18
வயது நிறைவடைந்தோர் தேர்தலில்
வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள்.
தேர்தலில் வாக்களிப்பதில் இந்திய குடிமக்கள்
இடையே சாதி, மதம், பால், இனம் அல்லது
தகுதி அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும்
கடைப்பிடிக்கப்படுவதில்லை.
சுதந்திரமான, ஒருங்கிணைந்த நீதி அமைப்பு
இந்தியாவில் இயங்கும் நீதி அமைப்பு
அதன் செயல்பாடுகளில் நிர்வாகத் தலையீடோ
அல்லது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின்
தலையீடோ இல்லாமல் இயங்கும் ஒரு
தன்னாட்சி அமைப்பாகும். ஒருங்கிணைந்த
இந்திய நீதி அமைப்பில் உச்ச நீதிமன்றம்
தலைமை அமைப்பாகவும் அதன் கீழே
உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள்,
துணை நீதிமன்றங்கள் எனவும்
இயங்குகின்றன.
அடிப்படை உரிமைகள் :
இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள
சட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்
அடிப்படை உரிமைகள் ஆகும். அவை மீறப்பட
முடியாதவை. நெருக்கடி நிலை காலங்களில்
சிலகுறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை (20-
வது, 21-வது தவிர) விலக்கி வைக்கலாம்.
அப்போது, அசாதரணமான
காரணங்களுக்காகத் திருத்தப்படலாம்.
அடிப்படை உரிமைகள் மீறப்படும் ப�ோது
நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றினை
செயல்படுத்துகிறது.
‘கல்வி உரிமை’ : இந்திய அரசமைப்பின்
(82-வது திருத்தம்) 2002, இந்திய அரசமைப்பு
உறுப்பு 21 அ-வில், 6 முதல் 14 வயதுவரையான
அனைத்துச் சிறார்களுக்கும் இலவச, கட்டாயக்
கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக
இணைத்துள்ளது. இதை
அமலாக்கும்வகையில் மாநிலங்கள் விதிகளை
வகுத்துக்கொள்ளலாம். சிறார் இலவச
கட்டாயக் கல்வி சட்டம், 2009, அரசமைப்பு
உறுப்பு 21-அ கீழ் வழங்கப்படும் அடிப்படை
உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம்
இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு
குழந்தையும் நிறைவுதரும் வண்ணம்
அடிப்படைக் கல்வியை முழு நேரம் பெற
உரிமைகொண்டுள்ளது; அடிப்படைக்
கல்விக்குரிய அடிப்படை விதிகள் மற்றும்
தரங்களின்படி அடிப்படை பள்ளிக் கல்வி
சமத்துவமாக வழங்கப்பட வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிகள்
அரசாட்சி தொடர்பாக அரசு கடைபிடிக்க
வேண்டிய வழிகாட்டு நெறிகள் இந்திய
அரசமைப்பின் நான்காவது பகுதியில் அரசு
கொள்கைக்கான வழிகாட்டு நெறிகள் எனும்
தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளன.
அடிப்படைக் கடமைகள்
42-வது திருத்தத்தின் வாயிலாக
அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசமைப்பு பகுதி IVஅ உறுப்பு 51அ-வில்
வழங்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள்
ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய
அறக் கடமைகள் ஆகும்.
கூட்டாட்சி அல்லது ஒற்றையாட்சி
இந்தியா சிதைக்க முடியாத ஒன்றியமும்
(மத்திய அரசும்) சிதைக்கத்தக்க மாநிலங்களும்
கொண்ட ஆட்சி முறையாகும். அதாவது
நெருக்கடிநிலை காலத்தில் ஒற்றை ஆட்சி
குணாம்சம் கொண்டது என்பது இதன்
ப�ொருளாகும். ஒன்றியம் முழுமையான
கூட்டாட்சி என்று கூறமுடியாது. ஆனால்,
கிட்டத்தட்ட கூட்டாட்சி முறை என்று கூறலாம்.
வடிவத்தில் கூட்டாட்சி அமைப்பைக்
கொண்டிருந்தாலும் இந்திய அரசமைப்பு பிற
கூட்டாட்சி முறைகள் ப�ோன்றதல்ல. ஒற்றையாட்சி
முறை, கூட்டாட்சி முறை இரண்டும் கொண்ட,
இரண்டையும் நேரம், சூழல் ப�ோன்ற
தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளத்தக்க
ஆட்சிமுறையைக் கொண்டுள்ளது.
0 Comments: