இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களாட்சி
 உறுப்பு 79இன் கீழ் இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரும் ஈரவைகளும் கொண்டது ஆகும். ஈரவைகள் மாநிலங்களவை, மக்களவை என்று அறிவோம். ஒரு கூட்டாட்சியில் நாடாளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இதனை ஏற்கப்படுகிறது; மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவை மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் கீழவை என்று அழைக்கப்படும் மக்களவை மக்கள் பிரதிநிதித்துவமும் கொண்டவையாகும். ஈரவைகளும் தன் இயல்பில் செயல்பட்டு மாநிலங்களின் ஒற்றுமை, ஒன்றிய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்துப் பராமரிக்கின்றன. மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டதாகும். இதில் 12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்டபகுதிகளின் சட்டமன்றங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவை 543 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இவர்கள் தொகுதிவாரியாக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இரண்டு உறுப்பினர்கள் ஆங்கிலோ- இந்திய சமுதாயத்திலிருந்து குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். 

மாநிலங்களவையின் ப�ொருத்தபாடு மாநிலங்களவை மேலவை என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் சிறப்பம்சத்தை வலியுறுத்தும் வகையில் இப்பெயர் 1954 ஆகஸ்ட் 23 அன்று மாநிலங்களவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலங்களவையின் உருவாக்கம் மாண்டேகு- செமஸ்போர்டு திட்டம் காலம் வரை பின்நோக்கிச் செல்கிறது. அதுவரை வரம்புக்கு உட்படுத்தப்பட்ட வாக்குரிமையுடன் கூடிய சட்டமன்றம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதனோடு இரண்டாவதாக ‘மாநிலங்கள் குழு’ அவை இந்திய அரசாங்கச் சட்டம், 1919இன் கீழ் உருவாக்கப்பட்டது. இதனையொட்டி 1921முதல் மாநிலங்கள் குழு அவை செயல்பட்டு வருகிறது. அன்றைய மாநிலங்கள் குழு அவையில் தலைவராக கவர்னர் – ஜெனரல் செயல்பட்டார். விடுதலைக்குப் பின், புதிய அரசமைப்பு உருவாக்கும் ப�ொருட்டு அமைந்த அரசமைப்பு நிர்ணயசபை மாநிலங்களவை தொடர்வது குறித்து மிக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், நாட்டில் நிலவும் பன்மைத்துவத்தைக் கருத்திற் கொண்டு ஈரவைகள் கொண்ட நாடாளுமன்றத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மாநில மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை ஒரு கூட்டாட்சி அமைப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களையும் சேர்த்து மாநிலங்களவை மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டதாகும். குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவைத் தலைவராக செயல்படுவார். அவர் இல்லாத நேரங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் துணைத்தலைவர் அவையை நடத்துவார். மாநிலங்களவை மக்களவை ப�ோன்று கலைக்கப்பட முடியாததாகும். மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952 மே 13 அன்று தொடங்கியது. மக்களவை மேற்கொள்ளும் பணிகள், செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை விதிகள் ஆகியவை தனி பிரசுரமாக அச்சிடப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் பல பிரிவுகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன; அரை மணி நேரம் விவாதம், குறுகிய கால விவாதம் மற்றும் ப�ொது நலன் அடிப்படையிலான தீர்மானங்கள் மீதான விவாதங்கள் ப�ோன்றவையாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.