அடிப்படைக் கடமைகள்
இந்திய அரசமைப்பு பாகம் 4அ
அடிப்படைக் கடமைகளை வரையறை
செய்கிறது (51அ). இந்திய குடிமக்கள்
ஒவ்வொருவரின் கடமைகள் கீழ்க்கண்டவாறு
கொடுக்கப்பட்டுள்ளன.
அ) அரசமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன்
மாண்புகள், நிறுவனங்கள், தேசியக் கொடி,
தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை
அளிக்க வேண்டும்.
ஆ) நமது நாட்டு விடுதலைக்கான
ப�ோராட்டத்தின் ப�ோது பின்பற்றப்பட்ட
உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்ற
வேண்டும்.
இ) இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை,
ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து
ப�ோற்ற வேண்டும்.
ஈ) தேவையான காலங்களில் அழைப்பு
விடுக்கப்படும்போது நாட்டைப்
பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும்
முன்வர வேண்டும்.
உ) மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து
மக்களிடையே ஒருமைப்பாட்டினையும்
உலகளாவிய சகோதரத்துவத்தினையும்
உருவாக்க வேண்டும்; பெண்களின்
மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும்
நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
ஊ) நமது பன்மைத்துவப் பண்பாட்டின்
வளமான மரபினை மதித்துப் பாதுகாக்க
வேண்டும்.
எ) வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன
உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை
வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி
அனைத்து உயிரினங்களும் வாழத்
தகுந்ததாக பராமரிக்க வேண்டும்.
ஏ) அறிவியல் ஆர்வம், மனிதநேயம், தேடல்
நெறி, சீர்த்திருத்தம் ஆகியனவற்றை
உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐ) ப�ொதுச் சொத்துகளை சேதப்படுத்தாமல்
மற்றும் பாதுகாக்கவும் வேண்டும்.
0 Comments: