சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை

  ஓரவை: ஒரு சட்டப்பேரவையை மட்டுமே மக்களவையாக கொண்டுள்ள தேசிய சட்டமன்றம் ஓரவை என்று அழைக்கப்படும்.

   ஈரவை: சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு ஈரவை முறை என்று அழைக்கப்படும்.

   உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை: மக்களவை மாநிலங்களவைக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும். 
  சட்டமுன்வரைவு: ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவுவாக” முன்மொழியப்படுகின்றது. அந்த சட்ட முன்வரைவவை அரசமைப்புக் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

   திருத்தச்சட்டம்: இந்திய அரசமைப்புக்கோட்பாட்டின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மாற்றாமல் மாறும் நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு சமகாலத்திற்கு பொருத்தமாக திருத்தக்கூடிய ஒரு தனித்துவமான ஏற்பாட்டை இந்திய அரசியமைப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது சட்டத் திருத்தம் ஆகும்.

   கண்டன தீர்மானம்: குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதித்துறைச் சார்ந்த பணிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அவர்களுக்கெதிராக கண்டன தீர்மானம் ஈரவைகளிலும் நிறைவேற்றினால் அவர்களின் பதவி பறிபோகும்.

   உறுப்பினர்களுக்கான விலக்களிப்புகள்: அவையின் எல்லைக்குள் கைதுக்கு எதிரான பாதுகாப்பு 

  கூட்டுக் கூட்டத்தொடர்: சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார். 

  கூட்டத்தொடர்: சட்டமுன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், தீர்மானங்கள் ஆகியவை போன்ற பல்வேறு செயல்குறிப்புக்கள் குறித்து விவாதம் நடத்துவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம். 

  நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக மக்களவை/ சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெருவதற்கான வழிமுறையாகும். ஒருவேளை அந்த தீர்மானம் வெற்றி பெற்றால், மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.