நீதி சீராய்வு சமநிலை நாடாளுமன்ற
மேலாதிக்கம்:
இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள
அடிப்படை உரிமைகள் மீறப்படாமல்
கண்காணிப்பதிலும் நாடாளுமன்ற நிர்வாகச்
செயல்பாடுகளில் தேவைப்பட்டால்
தலையிடுவதிலும் நீதித்துறைக்கு சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது இது இந்திய
அரசமைப்பின் சிறப்புக்கூறுகளில் ஒன்று
ஆகும். நீதி அமைப்பும், நாடாளுமன்றமும்
ஒன்றுக் கொன்று சமமாக மேலாதிக்க தன்மை
கொண்டவை. உச்ச நீதிமன்ற உத்தரவையே
அல்லது தீர்ப்பையே நாடாளுமன்றத்தில்
இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்
உச்ச நீதிமன்றமே மறுபரிசீலனை செய்யலாம்.
அதேப�ோல், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட
சட்டம் அரசமைப்பின் அடிப்படை
தத்துவத்திற்கு முரணாக இருந்தால், அதை
செல்லாததாக்கும் அதிகாரம், நீதி சீராய்வு
எனப்படும்.
இந்தியக் குடியுரிமை
ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள்
யார் என்பதை அடையாளம் காண்பது
குடியுரிமை ஆகும். இந்திய அரசமைப்பு
ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியுரிமைச்
சட்டம், 1955, குடியுரிமை பெறுதல் மற்றும்
உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது.
பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கைவயப்படுத்தல்
மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல்
ஆகிய வழிகளில் குடியுரிமை பெற இந்திய
அரசமைப்பு வழிவகை வழங்குகிறது.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடியுரிமையை
விலக்கிக்கொள்ளவும் ரத்துசெய்யவும்
விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின்
அயல்நாட்டு குடிமக்கள் பதிவுமுறைகளும்,
அவர்கள் உரிமைகளும் அரசமைப்பில்
வழங்கப்பட்டுள்ளன.
2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில்
மத்திய உள்துறை துணை அமைச்சரால்
அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைகள்
சட்டவரைவு, 2015, குடியுரிமைச் சட்டம்,
1955இல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.பதிவு அல்லது இயல்புரிமை முறையில்
இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும்
நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால்
அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ
அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள்
இருந்தாலோ ஒரு நபர் இந்தியக்
குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், அசாதாரண சூழல் நிலவுமானால்
இந்தத் தகுதிகளைத் தளர்த்திக்கொள்ளவும்
இந்த சட்டம் வழி வகுக்கிறத
அடிப்படை உரிமைகள்: ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட
அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை
அடிப்படைக் கொள்கையாக அரசமைப்பு
உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்பு,
பகுதி III இல், அடிப்படை உரிமைகளுக்கான
பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படை
உரிமைகள் ஆறு தலைப்புகளில்
வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவையாவன:
சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திரத்துக்கான
உரிமை, சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை,
மத வழிபாட்டுக்கான உரிமை, மற்றும் கல்வபண்பாட்டு உரிமை, அரசமைப்புப்படி
நிவாரணம் கோரும் உரிமை. தொடக்கத்தில்,
சொத்து உரிமை உறுப்பு 31(அ)வின் கீழ்
வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, சொத்து
உரிமையும் அடிப்படை உரிமையாக இருந்தது.
44-வது திருத்தச்சட்டம், 1978 சொத்து
உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து
நீக்கிவிட்டு, உறுப்பு 300(அ) ஆகச் சேர்த்தது.
இதன் மூலம் சொத்து உரிமை சட்ட
உரிமையாகக் கருதப்படுகிறது.
இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள
அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால்
நிலைநாட்டப்படுபவை ஆகும். ஒரு நபர் தமது
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக்
கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி
நிவாரணம் அடைய முடியும். இதனையொட்டி
நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை
நாடும் உரிமை உறுப்பு 32-இல்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கான
அரசியல் நீதியை அது உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவில் அடிப்படை உரிமைகள்
முழுமையானவை அல்ல. நாட்டின் பாதுகாப்பு
தேவையைக் கருத்தில் கொண்டு உகந்த
தடைகள் விதிக்கப்படலாம்.
0 Comments: