Monday, 4 November 2019

T. Sareetha vs T. Venkata Subbaiah on 1 July, 1983 - நடிகை சரிதா

T. Sareetha vs T. Venkata Subbaiah on 1 July, 1983

Saritha is an Indian film Singer/Actress/Producer, who has worked predominantly in Malayalam movie industry 

இது ஒரு மிகப்பெரிய பிரபலமான வழக்காகும். ஒரு காலகட்டத்தில் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சரிதா அவர். அவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே,வெங்கட் சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் திரையுலகில் மெல்லமெல்ல பிரபலமடைய தொடங்கிய உடன், நெல்லூரில் வசிக்கும் தனது கணவரையும், அவருடனான தாம்பத்திய உறவையும், அதன் விளைவாக குழந்தை பிறப்பதையும் புறக்கணிக்க ஆரம்பித்தார் இதனால் மனம் உளைச்சலுக்கு ஆளான வெங்கடசுப்பையர், சரிதா உடனான தனது தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டு அளிக்கக்கோரி நெல்லூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் கூறியபடியே சரி தாவுடன் தாம்பத்ய உறவுகளை மீட்பதற்கான தீர்ப்பாணை பிறப்பித்தது.இத்தீர்ப்பை எதிர்த்து சரிதா ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

 மேல்முறையீட்டில்தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டு அளிப்பதற்கு வகை செய்யும் இந்து திருமண சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 ஆவது சரத்தின் கீழான சுதந்திரத்தையும் மற்றும் சரத்து 14 கீழான சம உரிமையையும் மீறுவதாக உள்ளது என்றும், எனவே மேற்படி இந்து திருமணச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவானது அரசியலமைப்பு அற்றது என்று வாதம் புரிந்தார். இதற்கு அடிப்படையாக பின்வரும் காரணங்களை கூறினார்

1. "குழந்தை பிறப்பதற்காக தனது உடல் எங்கே எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்த கூடாது என்பதை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனது உடலின் பல்வேறு பகுதிகளில் எப்பொழுது, யாரால் உணர்வூட்ட படவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையையும்" அந்தரங்க உரிமையின் பார் பட்டது.

இந்த அந்தரங்க உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 கீழான சுதந்திர உரிமையின் ஒரு பகுதியாக உள்ளது. தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டெடுக்கும் தீர்வு, இந்திய திருமணச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவின் வாயிலாக அங்கீகரிப்பதன் வாயிலாக, இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது சரத்தின் வாயிலாக ஒரு பெண்ணிற்கு அளித்துள்ள அடிப்படை சுதந்திர உரிமை மீறுகிறது.

2. 14 ஆவது சரத்து சமத்துவ உரிமையை கூறுகிறது. அதாவது சம நிலையில் உள்ளவர்கள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பது சமத்துவ உரிமை அடிப்படைத் தத்துவமாகும். ஆனால் மேற்படி ஒன்பதாவது பிரிவின் கீழ் வழங்கப்படும் தீர்ப்பு, திருமணமான ஆண் மற்றும் திருமணமான பெண் ஆகிய இருபாலருக்கும் பொது வாக உள்ளது. இது சமநிலையை இல்லாத இருவரை சமமாக பாதிப்பதாக உள்ளது. எனவே மேற்படி ஒன்பதாவது பிரிவு 14 வது ச ரத்தை மீறுவதாக உள்ளது.

இவ்வாறாக மேற்கண்ட இரண்டு காரணங்களின் அடிப்படையில் ஒன்பதாவது பிரிவு அரசியல் அமைப்பது என்று சரிதாவின் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதியரசர் திரு பி ஏ சவுத்ரி அவர்கள் சரிதாவின் மேற்கண்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு, குழந்தைப் பேறுக்காக ஒரு மனைவியை அவளுடைய விருப்பத்துக்கு விரோதமாக கணவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவது வாயிலாக , பிரிவு 9 ஆனது அம் மணவியின் அந்தரங்க உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்று கூறி, அப்பிரிவு நீக்க  செய்தார். இதன் விளைவாக தாம்பத்திய உறவு உரிமைகளை மீட்டெடுக்க கூறி வெங்கடசுப்பையர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: