World Health Organization - WHO

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் ஒரு அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்து பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ் என்கிற அமைப்பு இருந்தபோது சுகாதார அமைப்பின் வழி வந்ததாகும்.

நோக்கம்

உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகள் உடன் போராளிகள் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

உருவாக்கம்

உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.இதன் உருவாக்கமானது 26 நாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள படி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.இந்த அமைப்பின் சட்டத்தில் உலகின் 61 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.தற்போதைய முக்கியத்துவம் நோய்த்தொற்று கொடுப்பதும் எய்ட்ஸ் மலேரியா காசநோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதாகும்.உடல் நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்ட் ஹெல்த் ரிப்போர்ட் இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது. இதன் சின்னமாக நோயை குணப்படுத்தும்  அஸ்லிபியசின் தடி எடுக்கப்பட்டுள்ளது. என் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் உள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

பணிகள்
இதன் நோக்கம் எல்லா மக்களுக்கும் முடிந்த வரையிலான உடல் நலத்தை பெற வழிவகுத்தல் இதன் நோக்கத்தை நிறைவேற்ற கீழ்க்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.
1. உலக அளவில் சுகாதாரத்தைப் பேணும் நேரடி உயர்நிலை அமைப்பாக இருத்தல்
2. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து சிறப்பு சுகாதார குழுக்களை ஏற்படுத்துதல்.
3. அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி சுகாதாரத்தை பேண உதவும்.
4. அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அவசரகால உதவிகளைச் செய்து தருதல்.
5.ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு ஏற்ப பகுதி வாரியாக சிறப்பு குழுக்களுக்கு பயிற்சி அளித்தல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.