Universalization of Human Rights

மனித உரிமைகள் உலகமயமாதல்
மனித மனித உரிமைகள் தேசிய அளவில் தொடர்புடையவை என கருதப்பட்ட காலங்கள் உண்டு ஆனால் காலகட்டங்களிலும் மனித உரிமையை சர்வதேச அளவில் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல் இல்லை.1815 ஆம் ஆண்டு நடைபெற்ற வியன்னா காங்கிரஸில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பல்வேறு மனித உரிமைகள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.1864 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மாநாடுகள் போர்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு தேசம் மதம் இனம் வேறுபாடின்றி அளிக்கப்பட வேண்டிய முதலுதவி பாதுகாப்பை உறுதி செய்தது. இதுவே சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆக வளர்ந்துள்ளது. 1918இல் முடிவுற்ற முதல் உலகப் போருக்குப் பின் 1919 ஜனவரியில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் முடிவுகளின் அடிப்படையில் 1919 ஜூனில் நடைபெற்ற வெர்செயில்ஸ் உடன்படிக்கை அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் 14 அம்ச திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் பண்டமாற்று பொருட்களை போலும் ஆதிக்க அரசியலில் பகடைக்காய்களாக பயன்படுத்த கூடாது என்ற உட்ரோ வில்சன் கருத்துக்களை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான கருத்துக்களாகும்.
அதைத்தொடர்ந்து சர்வதேச அமைதி பாதுகாப்பு நேச உறவு போன்ற உத்தம நோக்கத்திற்காக 1070 இல் உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின் முக்கிய அமைப்பான சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பில் நாடுகள் மட்டுமின்றி தொழிலாளர்கள் முதலாளிகள் என்ற இரு தரப்பினரும் கலந்து வாழ்கின்ற ஒரு சர்வதேச அமைப்பாக விளங்கியது. இவ் அமைப்பு நடத்திய 49 மாநாடுகளிலும் தொழிலாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துதல் எட்டு மணி நேர வேலை மருத்துவ வசதி வாழ்க்கை தேவைக்கு ஏற்ற ஊதியம் சம வேலைக்கு சம ஊதியம் வாரவிடுமுறை சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுரண்டப்படுவது தடுத்தல் இரக்கமற்ற முறையில் பெண்கள் நடத்தப்படுவது தடுத்தல் சங்கம் அமைக்க உரிமை பெறுதல் என பல உரிமைகளை மக்கள் பெற்றனர்.1925 இல் ஜெனிவாவில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு மாநாடு 1932இல் உருவாக்கப்பட்ட நிரந்தர அடிமை ஒழிப்பு ஆணையமும் அடிமை ஒழிப்பதற்கு பன்னாட்டு அளவில் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் ஆகும்.சிறுபான்மையினர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுகாதாரத்தை கெடுக்கும் நோய்களுக்கு எதிராகவும் சர்வதேச சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.சர்வதேச சங்கம் சர்வதேச பிரச்சினைகளை தீர்ப்பதில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கும் 1035 பின்பு பன்னாட்டு அரசியல் ஏற்பட்ட சிக்கலான தன்மைகளும் நாடுகளின் சுய ஆர்வமும் கருத்து முரண்பாடுகளும் ஆக்கிரமிப்பு சக்திகளும் மீண்டும் போருக்கான சூழ்நிலை உருவாக்கியதால் சர்வதேச சமூகம் தட்டுத்தடுமாறி தகுந்த வழி நடத்தல் என்று தோல்வியை தழுவியது.உலக சந்தையில் பங்கு போடுவதில் ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் சர்வதேச சமநிலையை திக்குமுக்காட செய்தது.இத்தாலியில் முசோலினி நடத்திய கொடூர ஆட்சி யூத இனத்தை கருவறுக்கும் பாசிஸ சக்திகள் கோரத்தாண்டவம் ஆக தொடங்கின. ஆனால் அவைகள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ரஷ்யாவிற்கு எதிராக ஏவி விடுதல் ஆர்வங் காட்டப்பட்டன. ஆனால் வரலாறு திரும்பியது ஹிட்லர் எல்லாரையும் ஏமாற்றி எல்லோருக்கும் எதிராக திரும்பினார்.அமெரிக்கா பிரிட்டன் ரஷ்யா பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒருபுறமும் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் போன்ற சர்வாதிகார நாடு இன்னொரு புறமும் நின்று மோதின. இப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி காயமுற்ற அவர்கள் எண்ணிக்கை 3.5 கோடி எனக் கணக்கிடப்பட்டது .பொருளாதார நெருக்கடி கொலை கொள்ளை கற்பழிப்பு கொடூரமான சித்திரவதை விஷப்புகை கட்டாய கருக்கலைப்பு போன்ற சமூக விரோத செயல்கள் மனித குலத்தையே தலைகுனிய வைத்தது.மனிதாபிமானம் பெருமளவில் செத்துப் போயிற்று போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சமரசம் தொடங்கி ஒரு சூழலில் அமெரிக்கா தான் தயாரித்த அணுகுண்டு சோதனை செய்து பார்க்க எண்ணி 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசியது.இது பெருத்த வேகத்தையும் நாசத்தையும் ஏற்படுத்தியது மனிதகுலத்திற்கு பெரிய எச்சரிக்கை ஆனது.இத்தகைய சூழ்நிலையை ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை ஆணையம் உருவாவதற்கு அடிப்படைக் காரணங்கள் ஆயின.இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும்போதே நடைபெற்ற பல மாநாடுகள் ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் முழுமை பெறுவதற்கு காரணமாக இருந்தன.போர் ஆரம்பித்த உடனேயே பன்னாட்டு தலைவர்களும் இராஜதந்திரிகளும் சர்வதேச கழகத்திலிருந்து குறைபாடுகளை திருத்தி அமைக்க காங்கிரசுக்கு வழங்கிய ஆண்டறிக்கையில் நான்கு சுதந்திரம் என்ற உறுதிமொழியை அளித்தார்.அதுவே பேச்சு சுதந்திரம் வழிபாட்டு சுதந்திரம்  விடுதலை தேவையி இருந்து விடுதலை. 1941 ஆகஸ்டில் ரூஸ்வெல்ட் இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலும் வெளியிட்ட அட்லாண்டிக் சாசனம் ஐக்கிய நாடுகள் சபையின் கருவாகும். இச்சாசனம் கொள்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் பிரகடனம் 1942 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குதல் பொருளாதார சமத்துவம் சமூக நலன் பேணுதல் பலாத்காரத்தை கைவிடுதல் உலக அமைதி போன்ற முக்கிய அம்சங்கள் அடங்கியுள்ளன.1943 அக்டோபரில் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் நேச நாடுகள் இடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பையும் கொண்டுவருவது பற்றி விவாதிக்கப்பட்டது.1043 நவம்பரில் நடைபெற்ற டெக்ரான் மாநாட்டில் அனைத்துலக நாடுகளில் சமத்துவம் பற்றியும் ரெட்டுப்ஸ் மாநாட்டில் பொது நாணயமாற்று தடையில்லா வாணிபம் போன்றவற்றின் அடிப்படையிலும் பொருளாதார ஏற்படுத்துவதற்கும் 1944 செப்டம்பரில் நடைபெற்ற டம்பர் டென்ஸ் மாநாட்டில் போருக்குப்பின் உருவாக இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் முதல் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இறுதி போலந்து இறுதியாக ஒப்புதல் வழங்கியது 51 தொகுதி உறுப்பினர். 1945 அக்டோபர் 24 ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தொடங்கியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.