Monday, 1 July 2019

Universal declaration of human rights

Universal declaration of human rights
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்
மைக்க நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக குழுவால் 1945 உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை கண்காணிப்பகம் பன்னாட்டு மனித உரிமைகள் மசோதா ஒன்றை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் பன்னாட்டு மனித உரிமைகள் மசோதா வரைவதற்கான வரை ஒன்று திருமதி எலினா ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் குடியரசு தலைவராக இருந்த ரூஸ்வெல்ட்டின் மனைவி அவர்.இந்த மசோதா பிரகடனம் ஒப்பந்தம் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகள் என மூன்று பாகங்களைக் கொண்டதாகும். இதன் மூலப் பகுதி அனைத்துலக மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் எழுதி முடிக்கப்பட்டது. இதை டிசம்பர் 1948 பத்தாம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தனது 3 வது கூட்டத் தொடரில் ஏற்று வெளியிட்டது.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்ட நாளான டிசம்பர் 10 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகெங்கும் மனித உரிமை தினமாக கொண்டாடி வருகின்றனர்.அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை வரைந்த அவர்களில் மிக முக்கியமானவர் திரு ரினி காசின் ஆவார். இவர் மனித உரிமைகள் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பணிகள் மற்றும் ஆய்வு எண்ணிலடங்கா. இவர் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தலைவராக இருந்தவர். 1946 to 55 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவராகவும், 1955 முதல் 57 வரை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். இவரை மனித உரிமைகளின் தந்தை என்றும் உலகம் போற்றுகிறது.
இப் பிரகடனத்தில் ஒருமுக புறையும் 30 சரத்துக்கள் அடங்கியுள்ளது.சரத் களில் முதல் இரண்டு சரத்துக்கள் மனித உரிமை என்றால் என்ன என்பது குறித்து பொதுவான விவரங்களைக் குறிப்பிடுகிறது. 3 முதல் 21 வரை உள்ள சரத்துக்கள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றியும், 22 முதல் 27 வரை உள்ள சரத்துக்கள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றியும், 28 முதல் 30 வரை உள்ள ச ரத்துக்களில் ஒவ்வொரு மனிதனும் ஆற்றவேண்டிய சமூகக் கடமைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: