சர்வதேச தொழிலாளர் அமைப்பு
இங்கிலாந்தில் பிரசித்திபெற்ற தொழிற் சங்கத் தலைவரான ராபர்ட் ஓவன் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டினார்.முதல் உலகப் போருக்குப் பிறகு நாடுகளின் சங்கம் அமைதி மாநாட்டை நடத்தி இதன் விளைவாக 1919ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாகியது.இதன் நோக்கங்கள் உலகத்தில் உள்ள தொழிலாளர்களின் துன்பங்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் நீக்குவது ஆகும். மேலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணி நிலைகள் மேம்படுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும். இரண்டாம் உலகப்போரின் இந்த அமைப்பு தீவிரமாக இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிலடெல்பியாவில் 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு மாநாடு பல புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் வெளியிட்டது.சமூகப் பொருளாதார சுரண்டலில் இருந்து தொழிலாளர்கள் வர்க்கம் பாதுகாக்கப்பட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டது.1945 இல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு புதிய சர்வதேச அமைப்பாக உருவாக்கப்பட்ட 1946ல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு அங்கமாக செயல்பட்டு வருகிறது.இதன் அமைப்பு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியா இதன் உறுப்பினராக இருந்து வருகிறது. தற்பொழுது இது 123 நாடுகளை தனது உறுப்பினராக கொண்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறிக்கோள்களும் நோக்கங்களும்
1. உலகம் முழுவதும் உள்ள உழைக்கின்ற பெருவாரியான மக்களின் வறுமை துன்பம் மற்றும் அநீதி நீக்குதல்
2.தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைகளை மேம்படுத்துதல் சமூக நீதி அடிப்படையில் உலகம் முழுவதும் நிலையான அமைதியை ஏற்படுத்த.
3.ஒருநாள் மட்டும் ஒரு வாரத்திற்கு உச்ச அளவு என்ன என்பதை நிர்ணயித்து வேலை நேரத்தை ஒழுங்குபடுத்துதல்.
4. வேலை இன்மை தடுப்பதற்கு ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குதல்.
5.வேலையின் காரணமாக எழுகின்ற உடல்நலக் குறைவு நோய்கள் மற்றும் விபத்துகள் இவற்றிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்.
6.சிறுவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இவர்களை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து.
7.தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்.
8.சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை அங்கீகரிக்கவும் செயல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்தல்.
9. சுதந்திரமான கூட்டமைப்பினை கொள்கையை அங்கீகரிப்பது செயல்படுத்துவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்தல்.
10. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல்.
1944இல் பிலடெல்பியாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மீண்டும் விளக்கப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்பட்டது பின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அரசியல் சாசனத்திற்கு ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.
0 Comments: