Monday, 1 July 2019

Human Rights Council

மனித உரிமை குழுக்கள்

2005-ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியிலிருந்து 14ம் தேதி வரை ஐக்கிய நாடுகளின் தலைமையகமான நியூயார்க்கில் உலக தலைவர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் அரசியல் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பின்போது உலக உச்சி மாநாடு 2005 முடிவுகளுக்கான ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத்தில் உலகில்நிலவும் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க உலகத்தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் மனித உரிமைக் குழு உருவாக்கப்படும் என்றும் இது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பை எவ்வித பாகுபாடுமின்றி உண்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்சொன்ன ஒப்பந்தத்தின் அடிப்படையில பொது சபையானது மார்ச் 15 2006 ஆம் ஆண்டு மனித உரிமை குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு மனித உரிமை ஆணையத்திற்கு பதிலாக மனித உரிமை குழுவை நிறுவியது. இக்குழுவானது பொது அவையின் துணை அமைப்பாக உள்ளது. மனித உரிமை குழுவானது 47 உறுப்பினர்களைக் கொண்டது.உறுப்பினர்கள் நேரடியாக உள்ள தனிப்பட்ட முறையிலோ பொது அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரகசிய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.உறுப்பினர்கள் எண்ணிக்கையானது ஏற்றத்தாழ்வு இல்லாத புவியியல் ரீதியான பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டது.அதாவது 13 ஆபிரிக்க குழு 13 ஆசிய குழு கிழக்கு ஐரோப்பிய குழு மற்றும் 7 மேற்பரப்பில் குழு மற்றும் பிற நாடுகளின் குழு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மனித உரிமைக் குழுவின் பணிகள்

1.மனித உரிமைக் கல்வி மற்றும் கட்டளை மேம்படுத்துவது உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஆலோசனை வழங்குதல் தொழில் உதவி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றிற்கும் உதவுகிறது.
2. மனித உரிமைகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்கும் கருத்தரங்கம் அமைப்பது.
3.அனைத்துலகச் சட்டத்தின் மனித உரிமைகள் துறையின் வளர்ச்சி பற்றிய பரிந்துரைகளை பொது பொது சபைக்கு அளித்தது.
4.ஐக்கிய நாடுகளின் கூட்டங்கள் மற்றும் இதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி மனித உரிமைக்கான பொறுப்புகளை உறுப்பு நாடுகள் செயல் படுத்தும் நோக்கில் வழிமுறைகளை குறிப்பிட்டு மனித உரிமைகளைப் பாதுகாப்பது.
5. மனித உரிமை துறையில் அரசாங்கங்கள் அமைப்புகள் தேசிய மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் வாழ்வில் சமுதாயத்துடன் இணைந்து பணியாற்றுவது.
6. மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க பரிந்துரைகள் வழங்குவது.
7. பொது அவைக்கு ஆண்டறிக்கை சமர்ப்பிப்பது.
8.மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் அலுவல் பணி ஒத்தக் கடமையும் பொறுப்புணர்வுடன் பணியாற்றுவது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: